cbecpy@gmail.com      +9198944 75754

சிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி!

Home / Cricket / சிட்னியில் தோனி, தவான், ராயுடு கடும் பயிற்சி!
  10-Jan-2019  
Cricket Back to

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில், இந்திய வீரர்கள் தோனி, தவான், கேதர் ஜாதவ், ராயுடு ஆகியோர் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் போட்டி, வரும் 12 ஆம் தேதி சிட்னியில் நடக்கிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி 15 ஆம் தேதி அடிலெய்டிலும் 3 வது ஒரு நாள் போட்டி 18 ஆம் தேதி மெல்போர் னிலும் நடக்கிறது.

இதற்கிடையே, ஒரு நாள் போட்டியில் விளையாடும் தோனி, தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்தனர். இவர்கள் சிட்னி மைதானத்தில் நேற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தத் தொடரை முடித்துக்கொண்டு, நியூசிலாந்து செல்கிறது இந்திய அணி. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 3 டி20 தொடரிலும் பங்கேற்கிறது. 

உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தினால் மட்டுமே அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதால் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.