cbecpy@gmail.com      +9198944 75754

தோனியை நெகிழ வைத்த 87 வயது ஆஸி.ரசிகை!

Home / Cricket / தோனியை நெகிழ வைத்த 87 வயது ஆஸி.ரசிகை!
  11-Jan-2019  
Cricket Back to

’தல’ தோனிக்கு உலகமெங்கும் ரசிகர்கள்! நம்மூர் சந்து பொந்தில் இருந்து சிட்டியின் பட்டி தொட்டிவரை, வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் இருக்கிறார்கள், தோனிக்கு. அதற்கு சான்றாக நடந்திருக்கிறது இந்த சம்பவம். தோனியை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு சென்றி ருக்கிறார், ஆஸ்திரேலியாவின் 87 வயது ரசிகை!

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி, சிட்னியில் நாளை தொடங்குகிறது. 

இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள தோனி, கடந்த சில நாட்களாக சிட்னியில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக, எடித் நார்மன் என்ற 87 வயது பாட்டி, வந்தார். இதுபற்றி தோனிக்குச் சொல்லப்பட்டதும் அந்த மூத்த ரசிகையை சந்திக்க ரெடியானார், தோனி. பிறகு சிட்னி மைதானத்தில் அவரைச் சந்தித்தார்.

தோனியிடம் அவர் நீண்ட நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் தனது ஆசை நிறை வேறிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அந்த பாட்டி. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.