cbecpy@gmail.com      +9198944 75754

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இங்கிலாந்து!

Home / Cricket / வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இங்கிலாந்து!
  12-Feb-2019  
Cricket Back to

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், அபார சதமடித்தார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, நிதானமாக ஆடியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 277 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக பட்லர் 67 ரன்னும் பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல், ஜோசப், கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

(ஜாஸ் பட்லர்)

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.2 ஓவர்களில் 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜான் கேம்பல் மட்டும் 41 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மொயின் அலி 4 விக்கெட்டும் பிராட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்துள்ளது. பட்லர் 56 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 111 ரன்களுடனும் பென் ஸ்டோ க்ஸ் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 448 ரன் முன்னிலை பெற்றுள் ளது. இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.