cbecpy@gmail.com      +9198944 75754

இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றும் ஹர்பஜன் சிங் - வைரலான வீடியோ 

Home / Cricket / இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றும் ஹர்பஜன் சிங் - வைரலான வீடியோ 
  20-Apr-2019  
Cricket Back to

சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், சிலம்பம் சுற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் கிட்டத்தட்ட தமிழராகவே மாறிவிட்டார். 'புலவர்' என்று தமிழக ரசிகர்கள் அன்போடு பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு தமிழர்களோடு ஒன்றிவிட்டார். ஐபிஎல் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழில் ட்வீட் செய்தும், ஒவ்வொரு மேட்ச் முடிவிலும் திரைப்பட பஞ்ச் டயலாக்குகளை அள்ளி வீசியும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். 

விளையாட்டோடு நின்றுவிடாமல் தமிழர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போன்ற செயல்களாலும் தமிழர்களின் அன்புக்குரியவராக ஹர்பஜன் இருக்கிறார். இந்நிலையில் தமிழர்களின் விளையாட்டான சிலம்பாட்டத்தை கற்றுக்கொண்டு சிலம்பம் சுற்றி அசத்தி வருகிறார் ஹர்பஜன். 

இது தொடர்பாக சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வேட்டி அணிந்துகொண்டு முதலில் ஒரு சிலம்பத்தை சுற்றி அசத்துகிறார். பிறகு இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பத்தை சுற்றி ஆச்சரியப்படுத்துகிறார்.

‘முழுத் தமிழனாகவே மாறிவிட்ட புலவர் ஹர்பஜனை பாரென்று’ சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.