cbecpy@gmail.com      +9198944 75754

விராட் கோலி அதிரடி சதம் - பெங்களூர் 213 ரன் குவிப்பு

Home / Cricket / விராட் கோலி அதிரடி சதம் - பெங்களூர் 213 ரன் குவிப்பு
  19-Apr-2019  
Cricket Back to

கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 213 ரன் குவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி, பார்த்தீவ் படேல் களமிறங்கினர். 

பார்த்தீவ் 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த நாத்தும் 13 ரன்னில் நடையை கட்டினார். 59 ரன்களுக்கு பெங்களூர் அணி 2 விக்கெட்களை இழந்தது. பின்னர், விராட் கோலி உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். மொயின் அலி வந்த வேகத்தில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். விராட் 40 பந்திலும், மொயின் அலி 24 பந்திலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய அலி 28 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. கடைசி நேரத்தில் விராட் கோலி அதிரடி காட்டினார். 

                  

விராட் கோலி கடைசி ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்து சதம் அடித்தார். கடைசி பந்தில் தூக்கி அடிக்க முற்பட்டு 100 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 8 பந்தில் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.  

                             

இதனையடுத்து, 214 ரன் என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் லின் ஒரு ரன்னில் ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.