cbecpy@gmail.com      +9198944 75754

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்

Home / Cricket / ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்
  20-Aug-2019  
Cricket Back to

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை, உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி நீக்கியது. அத்துடன் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின், மூன்று மாதத்திற்குள் முடிவு செய்வார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீசாந்திற்கான தண்டனை 7 ஆண்டுகள் என நீதிபதி டி.கே.ஜெயின் நேற்று தெரிவித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் அவர் மீதான தடை முடிவுக்கு வரும் என அவர் கூறினார்.

     

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த் போது, “என்மீதான தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அவர்களது பிரார்த்தனை இன்று பலித்துள்ளது. இந்த வரும் எனக்கு 36 வயது. அடுத்த வரும் 37 வயதாகியிருக்கும். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட் எடுத்துள்ளேன். 100 டெஸ்ட் விக்கெட் எடுப்பதே எனது லட்சியம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்புவேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது. விராட் கோலி தலைமையில் விளையாட எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.