இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிசர்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சஹா, ரோஹித் ஷர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மயாங் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.