cbecpy@gmail.com      +9198944 75754

முரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி

Home / Cricket / முரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி
  17-Oct-2019  
Cricket Back to

விஜய் ஹசாரே போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக கிரிக்கெட் அணி, தொடர்ந்து 9 வெற்றியை பெற்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, பார்த்தீவ் படேல் தலைமையிலான குஜராத் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய தமிழக அணி, 9 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. முரளி விஜய் 94 ரன்களும் அபினவ் முகுந்த் 79 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 42.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் தமிழக அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் 55 ரன்கள் எடுத்தார். 

தமிழக அணி தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இது. இத்துடன் சி பிரிவின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் இடம்பெற்ற 10 அணிகளில் முதல் 2 இடங்களை பிடித்த தமிழகமும் குஜராத்தும் கால்இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.