cbecpy@gmail.com      +9198944 75754

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20: தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் !

Home / Cricket / வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20: தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் !
  27-Nov-2019  
Cricket Back to

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 தொடரில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Image result for shikhar dhawan

ஷிகர் தவான் உள்நாட்டில் நடைபெற்ற போட்டியின்போது காயமடைந்ததால் அவரால் வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Image result for shikhar dhawan

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் இந்த தொடருக்கான அணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

Image result for shikhar dhawan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து முதலில் நீக்கப்பட்டிருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பன்ட்டிற்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஷப் பன்ட் தவிர வேறு கீப்பர் யாரும் இடம்பெறவில்லை. எனவே வாய்ப்பே அளிக்காமல் சஞ்சு சாம்சானை அணியிலிருந்து ஏன் நீக்கம் செய்தீர்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.