cbecpy@gmail.com      +9198944 75754

73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!

Home / Cricket / 73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!
  30-Nov-2019  
Cricket Back to

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர ஸ்டீவ் ஸ்மித் 73 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும் பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகின் ஷா அப்ரிதி பந்துவீச்சில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன் லபுஸ்சக்னே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் போட்டி தொடங்கி நடந்தது. வார்னரும் லபுஸ்சக்னேவும் சிறப்பாக ஆடி சதமடித்தனர். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. வார்னர் 166 ரன்களுடனும் லபுஸ்சக்னே 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. 162 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சக்னே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 7000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ஸ்மித் 126 இன்னிங்ஸில் இந்த ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன், இங்கிலாந்து வீரர் வால்டர் ஹம்மண்ட் 131 இன்னிங்ஸில் 7000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 73 ஆண்டுகள் சாதனையை தகர்த்திருக்கிறார் ஸ்மித். இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 131 இன்னிங்ஸிலும் சச்சின் 134 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்திருந்தனர். 

இதனையும் படிக்கலாமே...ஆளுநராகிறாரா முரளிதரன் ? கடந்த காலத்தில் சுழன்ற சர்ச்சைகள் !   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.