cbecpy@gmail.com      +9198944 75754

ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்

Home / Cricket / ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்
  02-Dec-2019  
Cricket Back to

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலையட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 335 ரன்களும், லபுஸ்சனே 162 ரன்களும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கம் முதலே தடுமாறியது. எனினும் 8ஆவது வீரராக களமிறங்கிய யாசிர் ஷா மட்டும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 97 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 94.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலிய ஃபாலோ ஆன் அளித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் 68 ரன்கள் சேர்த்தார். அசாத் சஃபிக் 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் மீண்டும் சொதப்பவே பாகிஸ்தான் அணி 82 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 239 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. சிறப்பாக விளையாடிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.