" /> Coimbatore Companies | List Business
  cbecpy@gmail.com      +9198944 75754

வெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர்

Home / Movies / வெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர்
  05-Dec-2018  
Movies Back to

"பேட்ட" படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும், சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடைபெற்றது. ஏற்கெனவே ’பேட்ட’ ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படமும் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடனும் படத்தை திரையில் காண எதிர்பார்ப்புடனும் உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மரண மாஸ் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் பாட்டு இப்போது பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. இன்னொரு பாடலை வரும் 7 ஆம் தேதி வெளியிடுகின்றனர். பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ’பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.