cbecpy@gmail.com      +9198944 75754

வெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்

Home / Movies / வெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்
  05-Dec-2018  
Movies Back to

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாரி 2’ படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் பாலாஜிமோகன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாரி. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் ‘மாரி 2’ என்ற பெயரில் வெளியாகயுள்ளது. இத்திரைப்படம் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ், சாய் ‌பல்லவி, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷ்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நிலையில் இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பனியாற்றியுள்ளார். இசைஞானி இளையராஜா ‘மாரி2’வில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று ’மாரி2’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாயுள்ளதாக இயக்குநர் பாலாஜிமோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ’மாரி 2’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.