cbecpy@gmail.com      +9198944 75754

ஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்!

Home / Movies / ஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்!
  06-Dec-2018  
Movies Back to

’சாஹோ’ படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு முன் தனது ஜப்பான் ரசிகர்களை நடிகர் பிரபாஸ் சந்திக்க இருக்கிறார். 

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடித்துள்ள படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளின் போது ’சாஹோ’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப் பட்டுள்ள அந்த டீசர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, ஜப்பானிய ரசிகர்களையும் அது கவர்ந்தது.

இதையடுத்து பிரபாஸை சந்திக்க ஜப்பான் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபாஸ் நடித்த பாகுபலி உள்ளிட்ட படங்கள் ஜப்பானிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஐதராபாத் வரும் ஜப்பான் சுற்றுலா பயணிகள் அவரது வீட்டுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பான் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ். ’சாஹோ’ டீசர் வெளியீட்டுக்கு முன் அவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் பிரபாஸுக்கு நெருங்கியவர்கள் செய்து வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.