cbecpy@gmail.com      +9198944 75754

‘பேட்ட’யின் ‘உல்லல்லா’... 2-வது ட்ராக் வெளியானது..!

Home / Movies / ‘பேட்ட’யின் ‘உல்லல்லா’... 2-வது ட்ராக் வெளியானது..!
  07-Dec-2018  
Movies Back to

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.

அனிருத், எஸ்பிபி ஆகியோர் இணைந்து பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிக்கு குத்து பாடல் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் இன்று ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லல்லா’ என்ற பாடலை யுடியூப்பில் படக்குழு வெளியிட்டுள்ளனர். நாகாஷ் அஸிஸ், இன்னோ கெங்கா ஆகியோர் பாடியுள்ள ‘உல்லல்லா’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பேட்ட’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் இடம்பிடித்துள்ள முழு பாடலையும் வரும் 9-ம் தேதி படக்குழு வெளியிடுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.