cbecpy@gmail.com      +9198944 75754

ரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு

Home / Movies / ரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு
  10-Dec-2018  
Movies Back to

எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை ஒரு மந்திரம் போன்றது, அதனை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நன்றாக இருக்கலாம் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன், சித்திக் என நட்சத்திரங்கள் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

    

பேட்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்கக்கூடாது என கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை ஒரு மந்திரம். எக்ஸ்ட்ரா என்பதை சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அது ரொம்ப எளிமைதான். எக்ஸ்ட்ரா பேசக்கூடாது.. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது.. எஸ்க்ட்ரா தூங்கக் கூடாது, எக்ஸ்ட்ரா புகழக் கூடாது.. எக்ஸ்ட்ரா திட்டக் கூடாது.. எக்ஸ்ட்ரா அறிவுரை கூறக்கூடாது..

இப்படி இந்த எக்ஸ்ட்ராவில் நிறைய விஷயங்கள் உள்ளது. அதுவும் வயது ஆக ஆக.. எக்ஸ்ட்ரா சர்க்கரை சாப்பிடக் கூடாது.. எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது.. எக்ஸ்ட்ரா சிந்திக்கக் கூடாது..” என்று பேசினார்.

            

மேலும், கஜா புயல் மிகப் பெரிய பேரழிவு என்று கூறிய ரஜினிகாந்த், அதற்கான நிவாரணப் பணிகளை அரசால் மட்டும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடாது என்றார். பணம் உள்ளவர்களும், நல்ல மனது உள்ளவர்களும் நிவாரணப் பணிகளுக்கு உதவ வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.