cbecpy@gmail.com      +9198944 75754

வெளியானது ‘கஞ்சனா3’ மோஷன் போஸ்டர் 

Home / Movies / வெளியானது ‘கஞ்சனா3’ மோஷன் போஸ்டர் 
  15-Jan-2019  
Movies Back to


நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனராக அறிமுகமாகிய படம் ‘முனி’. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவருடன் வேதிகா, ராஜ் கிரண், வினு சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகத்தை ‘காஞ்சனா’ என்ற பெயரில் இயக்கினார். அந்தப்படமும் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டானது.

இதையடுத்து இதன் அடுத்த பாகத்தை ‘காஞ்சனா2’ என எடுத்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து ராகவா லாரன்ஸ், நாகா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்தப் படம் தொடங்கவில்லை. வேறு சில படங்களில் நடிக்கத் தொடங்கினர். 

பின்னர், ‘கஞ்சனா3’ படத்தை அவர் அறிவித்தார். ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, ஓவியா நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு எஸ்.தமன் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இந்த போஸ்டர் விளிம்புநிலை மக்கள் வாழும் குடிசைப் பகுதியில், கழுத்து, கைகளில் ருத்ராட்சம் மாலை அணிந்தபடி ராகவா லாரன்ஸ் கோபமாக அமர்ந்திருக்கும் படி அமைந்துள்ளது. பின்னணியில் இமானின் அதிரடி இசையுடன் தீம்  பாடல் ஒன்று ஒலிக்கிறது. காஞ்சனா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.