cbecpy@gmail.com      +9198944 75754

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!

Home / Movies / இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!
  16-Feb-2019  
Movies Back to

டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு  மாறினார். 

இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தருக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ படத்துக்கு இசை அமைத்தார். மகள் இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது. 

இந்நிலையில் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு நேற்று மாறினார். சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

இதுபற்றி டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, ‘’எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுபவன் நான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்துள்ளேன்.

என் மூத்த மகன் சிம்பு சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். குரளரசன், இஸ்லாமை பின்பற்றுகிறார்’’ என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.