cbecpy@gmail.com      +9198944 75754

நடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா

Home / Movies / நடிகர் ஆனார் இயக்குனர் ராம் கோபால் வர்மா
  08-Apr-2019  
Movies Back to

பிரபல சர்ச்சை இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா, நடிகராக அறிமுகமாகிறார்.

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, நாகார்ஜுனா நடித்த ’சிவா’ என்ற படம் மூலம் 1989-ல் இயக்குனரான அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் இயக்கி பிரபலமானார். இவர் இயக்கிய 'சத்யா' படம் தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்தியில் இவர் இயக்கிய ’ரங்கீலா’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு படங்களை இயக்கி தயாரித்துள்ள ராம் கோபால் வர்மா, சமீபத்தில் ’லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டது.


அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ’கோப்ரா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிபிஐ அதிகாரியாக ராம் கோபால் வர்மா நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் படம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த நாளான நேற்று வெளியானது. படத்துக்கு கீரவாணி இசை அமைக்கிறார். 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.