" /> Coimbatore Companies | List Business
  cbecpy@gmail.com      +9198944 75754

இசை மழையில் நனைய தயாராகுங்கள்! - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்!

Home / Movies / இசை மழையில் நனைய தயாராகுங்கள்! - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்!
  12-Apr-2019  
Movies Back to

"ஆஸ்கார் நாயகன்" ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில் “முதன்முறையாக தான் தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் மாறி ஒரு இசையை ஆன்மாவாக கொண்ட முழுக்க ழுழுக்க காதல் கதையாக அமையவுள்ள உணர்வுமிக்க படத்தை தயாரிக்கவுள்ளேன். தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம் மூவிஸ் மூலம்தயாரித்து இயக்கவுள்ள ‘99 சாங்க்ஸ்’ திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இப்படம் வெளியாகவுள்ளது.  ‘99 சாங்க்ஸ்’ படம் உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மூன்று மொழிகளில் இந்த வருடம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்களாகிய நீங்கள் இதுவரை பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் அதில்குறிப்பிட்டுள்ளார்.

 



 

 

‘99 சாங்க்ஸ்’ படத்திற்கான இசை வெளியீடு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடவுள்ளதாகவும், இந்த படத்திற்கான இசையமைக்க பத்து வருடங்கள் தேவைப்பட்டதாகவும், இதுவரை இல்லாத அளவில் மூன்று மொழிகளில் கலந்து அமையவுள்ள பாடல்களை கூடிய விரைவில் வெளியாக உள்ளதாகவும்...இசை வெளியீட்டில் ரசிகர்களின் அன்பை எதிர்ப்பார்க்கிறேன் எனவும், இசை ரசிகர்கள் தயாரா? என்றும் கேள்வி எழுப்பி..இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்,ஏ.ஆர்.ரகுமான்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.