cbecpy@gmail.com      +9198944 75754

சூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Home / Movies / சூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
  13-Apr-2019  
Movies Back to

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்துக்கு ''சூரரைப் போற்று'' என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இறுதிச்சுற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இறுதிச்சுற்றுக்கு பிறகு சுதா கொங்கரா சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என கூறப்பட்டது. சூர்யா காப்பான், என்ஜிகே உள்ளிட்ட  படங்களில் நடித்து வந்த நிலையில் சுதா கொங்கராவின் திரைப்படம் ஏப்ரல் 7ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 

இப்படத்திற்கு ஜிவிபிரகாஷ் இசையமைக்கிறார். சர்வம் தாளமயம் திரைப்படத்தில் நடித்த அபர்ணா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டது. ''சூரரைப் போற்று'' என்ற தலைப்புடன் வேட்டி சட்டை அணிந்து கொண்டிருக்கும் சூர்யா விமானத்தை பார்த்துக்கொண்டு நிற்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. 

நாளை காலை கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகுமென கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்தப்படத்தின் அப்டேட்டும் வந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #SooraraiPottru என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.