cbecpy@gmail.com      +9198944 75754

நாளை வெளியாகிறது ‘காப்பான்’  டீசர்

Home / Movies / நாளை வெளியாகிறது ‘காப்பான்’  டீசர்
  13-Apr-2019  
Movies Back to

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் காப்பான் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘காப்பான்’.  இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் முன்னணி மலையாள நடிகரான மோகன்லால் முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். ‘காப்பான்’ திரைப்படத்தில் சூர்யா, மோகன் லால் ஆகியோருடன் இணைந்து சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, மயில்சாமி உள்ளிடவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கிறார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். இதனிடையே முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவரின் படங்களைப் பார்த்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுகொண்டுள்ளதாகவும் சூர்யா தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில், காப்பான் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.