cbecpy@gmail.com      +9198944 75754

’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Home / Movies / ’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு!
  18-May-2019  
Movies Back to

’காஞ்சனா’ இந்தி ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ், இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய்,. கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தமிழில் வெளியான ’காஞ்சனா’வில் பேயை கண்டு நடுங்குபவராக லாரன்ஸ் நடித்திருப்பார். இந்தி ரீமேக்கில் பேயை நம்பாதவராகவும் பேயை கண்டு பயம் கொள்ளாதவராகவும் அக்‌ஷய்குமார் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மனைவியாக கியாரா அத்வானி நடிக்கிறார். காமெடிக் கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. 

(கியாரா அத்வானி)

படத்துக்கு ’லக்‌ஷ்மி பாம்ப் (Laxmmi Bomb)’ என்று டைட்டில் வைத்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின் மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டார். கண்ணுக்கு மையிடுவது போன்ற அந்த பர்ஸ்ட் லுக் போஸ் டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.