cbecpy@gmail.com      +9198944 75754

அதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’  ட்ரைலர் 

Home / Movies / அதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’  ட்ரைலர் 
  20-May-2019  
Movies Back to

அதிரடி அரசியல் வசனங்களுடன்  ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜோக்கர்' படத்திற்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிப்ஸி’. இதே தலைப்பில் இவர் ஏற்கெனவே ஒரு தொடரை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாசலப்பிரதேசம் பட்டம் வென்ற நடாஷா சிங் நடித்துள்ளார்.  ‘குக்கூ’ படத்தினை அடுத்து இதற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, செல்வகுமார் செய்துள்ளார்.

படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி இன்று ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமகால இந்திய அரசியல், தமிழக அரசியல், மக்கள் கையில் எடுக்கும் போராட்டம் என பல விஷயங்களை முன்னெடுத்து காட்டுகிறது ஜிப்ஸி ட்ரைலர். '

'ஒரு குரல்ல அடக்கனும்னு நினைச்சீங்கன்னா, ஓராயிரம் குரல் வெடிக்கும்'', ''அப்பாவி உயிர்களை பறிச்சா, திருப்பி அடிப்போம், உயிரை எடுப்போம்னு புரிய வைக்கணும்'' போன்ற வசனங்கள் அதிக கவனம் பெறுகின்றன. 

இந்தப்படம் இசை, காதல், அரசியல் என முழு கலவையான படமாக இருக்குமென்றும், விரைவில் திரைக்க வர உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.