cbecpy@gmail.com      +9198944 75754

காதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி!

Home / Movies / காதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி!
  17-Oct-2019  
Movies Back to

தனது கணவருடன் நடிகை பாவனா எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவர் நவீனுடன் செல்ஃபி எடுத்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ’மேஜிக்கும் காதலும் உங்களைச் சுற்றியே இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குடும்ப செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.