cbecpy@gmail.com      +9198944 75754

தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் நாளை ‘தல60’ படத்தின் பூஜை?  

Home / Movies / தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் நாளை ‘தல60’ படத்தின் பூஜை?  
  17-Oct-2019  
Movies Back to

தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் அஜித் நடிக்க உள்ள ‘தல60’ படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளதாக தகவல் கசிய தொடங்கி உள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் நடிப்பு குறித்தும் அவரது கதை தேர்வு குறித்தும் பலரும் நேர்மையாக கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு பற்றிய தகவலுக்காக அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். அஜித் வழக்கம் போல் இல்லாமல் துப்பாக்கிச் சுடும் போட்டி, ஜாலி பயணம் என ஆர்வம் காட்டி வருகிறார். இடையே இடையே சில ரசிகர்கள் அவருடன் செஃல்பி எடுத்து பதிவிடும் அரிய நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் மாமல்லபுரமும் சென்றிருந்தார்.

அஜித்தின் ‘தல60’ படத்தை ஹெச். வினோத்தான் இயக்க உள்ளார் என்று ஏற்கெனவே செய்தி வெளியாகி இருந்தது. அதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இதனிடையே அஜித் நடிக்க உள்ள ‘தல60’ படத்தின் பூஜை நாளை போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. நாளை காலை 10 மணி அளவில் இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடாகி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்தப்படும் 2020 ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.