cbecpy@gmail.com      +9198944 75754

‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ?’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’ 

Home / Movies / ‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ?’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’ 
  18-Oct-2019  
Movies Back to

40 கோடி செலவில் ‘இந்தியன்2’ சண்டைக்காட்சிகள் போபாலில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.  இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி மாதம் தொடங்கியது.  இந்தப் படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் வெற்றி இந்திய சினிமாவில் ஷங்கருக்கு தனி இடத்தை உருவாக்கியது. 

ஊழலை ஒழிப்பது குறித்தே படத்தின் கதைக் கருவாக இருந்தது. முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விமான விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், பின் வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் கதையை முடித்திருந்தார் இயக்குநர். இருவேடங்களில் கமல்ஹாசன் நடித்த இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார்.

இதன் வெற்றியை தொடர்ந்தே ‘இந்தியன்2’ தொடங்கியது. இதில் பிரபல நடிகை காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்காக காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வந்தார். மேலும் ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், டெல்லி கணேஷ் எனப் பலரும் நடித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் இயக்குநர் ஷங்கர் இணைந்துள்ளார். ‘2.ஒ’ மூலம் ரஜினியை இயக்கிய இவர் அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதற்கட்டமாக இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சில மாதங்கள் முன்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் பூஜையில் பங்கேற்றார். அதனை அடுத்து சென்னை மற்றும் ஆந்திராவின் ராஜமுந்திரியில் இதன் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

இளைஞர்களின் விருப்பமான இசையமைப்பாளரான அனிருத் படத்திற்கு இசையமைகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை செய்து வருகிறார். சில காரணங்களால் திடீரென்று நிறுத்தப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதற்காக, ‘இந்தியன்2’ படக்குழு போபால் செல்ல இருப்பதாக தெரிய வந்துள்ளது. அங்கே 2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து மாபெரும் சண்டைக் காட்சியை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மொத்தம் 20 நாட்களை படக்குழு ஒதுக்கி இருப்பதாகவும் தெரிகிறது. சுதந்திர போராட்ட வீரான கமல், இதில் 90 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். இவருக்கான சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் வடிவமைக்க உள்ளார். இந்த ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டும் 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ப்ளாஷ்பேகில் வரும் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை தைவான் மற்றும் யூரோப் நாடுகளில் எடுக்கவும் உள்ளனர். ஏனெனில் ‘இந்தியன்’ முதல் பாகத்தின் இறுதிக் காட்சியில், வெளிநாட்டில் இருந்தபடி தொலைபேசி செய்வார். ஆக, அந்தக் காட்சியில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்கியாக வேண்டும். எனவேதான் இந்த நாடுகளுக்கு படக்குழு பயணமாகிறது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.