" /> Coimbatore Companies | List Business
  cbecpy@gmail.com      +9198944 75754

"தர்பார்" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன ?

Home / Movies / "தர்பார்" படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன ?
  18-Oct-2019  
Movies Back to

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 

Image

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ குறித்த புதிய அப்டேட்டை சமீபத்தில் கொடுத்திருந்தார்.

Image result for nivetha thomas

அதில், கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக "பாபநாசம்" படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். "இந்த உலகம் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு ஆதித்யா அருணாச்சலம்தான். ஆம், அவர்தான் என் அப்பா" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என தெரிய வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.