விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத் தமிழன்’ படம் இன்று வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம், ’சங்கத் தமிழன்’. ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து படம் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் படம் இன்றும் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. '’இதற்கு முன் ’வீரம்’ படத்தை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். அதோடு விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி இருக்கிறது. இந்தப் பிரச்னை காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் பிரச்னை முடிந்தால், நாளை படம் வெளியாகும்'’ என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.