cbecpy@gmail.com      +9198944 75754

யோகிபாபுவுக்கும் எனக்கும் திருமணமா? - நடிகை விளக்கம்

Home / Movies / யோகிபாபுவுக்கும் எனக்கும் திருமணமா? - நடிகை விளக்கம்
  27-Nov-2019  
Movies Back to

யோகிபாபுவுக்கும் தனக்கும் திருமணம் என வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என நடிகை சபிதாராய் தெரிவித்திருக்கிறார். 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினியின் ‘தர்பார்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கும், சபிதாராய் என்கிற நடிகைக்கும் திருமணம் என கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில், தனக்கு திருமணம் என வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி மட்டுமே எனவும், திருமணம் நடக்கும்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் எனவும் யோகிபாபு தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து, யோகிபாபுவை திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்பட்ட நடிகை சபிதாராய் ஒரு வீடியோ மூலம் விளக்கமளித்திருக்கிறார். அதில், ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வதந்தி பரப்பும் வகையில் வெளியிட்டிருப்பதாகவும், யோகிபாபுவும் தாமும் நண்பர்கள் மட்டுமே எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.