cbecpy@gmail.com      +9198944 75754

வெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்?: விரைவில் அறிவிப்பு!

Home / Movies / வெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்?: விரைவில் அறிவிப்பு!
  05-Dec-2019  
Movies Back to

ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறன், நடிகர் விஜய்யை சந்தித்து புதிய கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64-வது படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்தப் படத்திற்கான கதை தேர்வில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பல இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள விஜய், தற்போது இயக்குநர் வெற்றிமாறனை அழைத்து கதை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொல்லாதவன் படம் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இறுதியாக இவர்கள் கூட்டணியில் வெளியான 'அசுரன்' படம் வெற்றியடைந்தது. 

இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவிடம் கதை கூறியுள்ள வெற்றிமாறன், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சந்தித்தார். இதனால் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார் என்று தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து புதிய கதை ஒன்றை வெற்றிமாறன் கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் படத்தில் விஜய் நடிக்கிறாரா இல்லையா என்பது இப்போது தெரியாது என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.