ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளதாக இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்
ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தர்பார் இயக்குநர் முருகதாஸ், நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் பெரிய ரசிகன் நான்.
நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவரின் சாயல் ரஜினிக்கு இருக்காது. ஆனால் ரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும் என தெரிவித்தார்