cbecpy@gmail.com      +9198944 75754

“நேற்று நடந்தது மாதிரி இருக்கு” - அஜித்தின்‘பில்லா’ 12 ஆண்டுகள் கொண்டாட்டம்

Home / Movies / “நேற்று நடந்தது மாதிரி இருக்கு” - அஜித்தின்‘பில்லா’ 12 ஆண்டுகள் கொண்டாட்டம்
  14-Dec-2019  
Movies Back to

அஜித்தின் ‘பில்லா’ திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை கடந்துள்ளது. 

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு இதேநாளில் வெளிவந்த திரைப்படம் ‘பில்லா’. இதற்கு முன் இதே தலைப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் 1980இல் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. ஆகவேதான் ‘பில்லா’ என்ற தலைப்பை அஜித் படக்குழுவினர் மீண்டும் வாங்கி பயன்படுத்தி இருந்தனர்.

இந்தப் படம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியில் பெரும் சாதனையை அடைந்தது. கோலிவுட் கேங்க்ஸ்டர் படங்களின் பட்டியலில் இன்றும் இதற்கு தனியான இடம் உண்டு. இதனை விஷ்ணு வரதன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அஜித் மிக ஸ்டைலாக வெளிப்பட்டிருந்தார். ஒளிப்பதிவு கையாளப்பட்ட புதுமைக்காக நிறைய பாராட்டுக்களையும் இது பெற்றது. மேலும் அஜித் இரட்டை வேடத்தில் நடித்தார். அஜித்தின் ‘பில்லா’  வெளியாகி 12 ஆண்டுகள் கடந்து விட்டன. 

‘பில்லா’ கொண்டாட்டம் குறித்து விஷ்ணு வர்தன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ஆஹா.. ‘பில்லா’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன ஒரு பயணம்? நினைத்தால் நேற்று போல் உள்ளது. ஆனாலும் இன்னும் என் இதயத்தில் புதிதுபோல் உள்ளது. அஜித்துடன் நான் சேர்ந்து செய்த முதல் படம். அதற்காக அவருக்கு என் நன்றி.

என் படத்தில் நடித்த நடிகர்களுக்கு படக் குழுவினருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுகிறோம். அனைவருக்கும் என் அன்பு. விரைவில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் அபரிமிதமான ஆதரவை அள்ளி வழங்கி உள்ளனர். ரீ- ட்வீட் வேற லெவலுக்கு சென்றுள்ளது. மேற்கொண்டு இந்தப் படத்தில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை ரசிகர்கள் நினைவுகூறி உள்ளனர்.

‘பில்லா’வில் நயன்தாரா, நமீதா, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.