cbecpy@gmail.com      +9198944 75754

உடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்: புகைப்படம் வெளியீடு!

Home / Movies / உடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்: புகைப்படம் வெளியீடு!
  10-Dec-2019  
Movies Back to

(கோப்புப்படம்)

28 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த லதா மங்கேஸ்கரின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளவர் லதா மங்கேஸ்கர்(90). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவருக்கு நவம்பர் 11-ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் மும்பையில் உள்ள பிரீச் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 28 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த லதா மங்கேஸ்கருக்கு தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ சிகிச்சை முடிந்து லதா மங்கேஸ்கர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகான அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. பாலிவுட்டைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் லதா மங்கேஸ்கரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

செவிலியர்களுக்கு நடுவே லதா மங்கேஸ்கர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.