cbecpy@gmail.com      +9198944 75754

‘தளபதி64’ படத்தில் ‘கலக்கப் போவது யாரு?’ தீனா

Home / Movies / ‘தளபதி64’ படத்தில் ‘கலக்கப் போவது யாரு?’ தீனா
  13-Dec-2019  
Movies Back to

‘தளபதி64’ படத்தில் ‘கலக்கப் போவது யாரு?’ தீனா, காமெடியனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 64'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்கள் முன்பு சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வையற்றவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது. இங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய், நாசர், அழகம் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமாக சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்ததாகவே பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் இப்போது இளம் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். ‘காலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற தீனா இப்படத்தில் காமெடி நடிகராக நடிக்க உள்ளதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி மூலம் காமெடியனாக அறிமுகமான தீனா, ‘தும்பா’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்குள் அறிமுகமானார். அந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இவர் இந்தத் தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் ‘கைதி’யில் நடித்திருந்தார். 

இந்நிலையில், ‘தளபதி64’ படத்தில் விஜயுடன் பல காம்பினேஷன் காட்சிகளில் தீனா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்பாக கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் ‘தளபதி64’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. விஜய்க்கு எதிரான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், பிரேம்குமார், சேத்தன், சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் ஸ்ரீமான் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.