cbecpy@gmail.com      +9198944 75754

‘விரைவில்..’ - “நெஞ்சம் மறப்பதில்லை” புதிய போஸ்டர் வெளியீடு

Home / Movies / ‘விரைவில்..’ - “நெஞ்சம் மறப்பதில்லை” புதிய போஸ்டர் வெளியீடு
  14-Dec-2019  
Movies Back to

செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Image

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உட்பட பலர் நடித்துள்ள படம், ’நெஞ்சம் மறப்பதில்லை’. கவுதம் வாசுதேவ் மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால், தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி காரணமாக இந்தப் படம் தள்ளிப்போனதாக கூறப்பட்டது.

Image result for selvaraghavan

திகில் கதை அம்சம் கொண்ட பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்தாண்டு பதிவிட்டார். அதேபோல், படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

Image result for selvaraghavan

இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் என்ற வாசகத்துடன் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனால், கூடிய விரைவில் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.