cbecpy@gmail.com      +9198944 75754

மிரட்டிய ஹெட்மயர் - வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

Home / Cricket / மிரட்டிய ஹெட்மயர் - வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
  15-Dec-2019  
Cricket Back to

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் ஏமாற்றினார். சற்று நேரம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 80 ரன்னிற்கும் மூன்று முக்கிய விக்கெட்களை இந்திய அணி இழந்தது.

              

பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அடித்து விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பந்த் 71 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பின்னர் வந்த கேதர் ஜாதவ் தன் பங்கிற்கு 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ரன்களில் அவுட் ஆக, இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்டரெல், பவுல், ஜோசப் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 288 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

         

தொடக்க ஆட்டக்காரர் அம்ரிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்த போதும், சாய் ஹோப், ஹெட்மயர் பொறுப்புடன் விளையாடினர். பதற்றமே இல்லாமல் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஹெட்மயர் அதிரடியாக விளையாடி சிக்ஸர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். 50 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 85 பந்துகளிலேயே சதம் விளாசினார். பின்னர் அவர் 106 பந்துகளில் 7 சிக்ஸர், 11 பவுண்டர்கள் உட்பட 139 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

       

இதனிடையே, நிதானமாக விளையாடிய ஹோப் 150 பந்துகளில் சதம் அடித்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47.5 ஓவரில் 291 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. சாய் ஹோப் 102 ரன்களுடனும், பூரான் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.