cbecpy@gmail.com      +9198944 75754

அமராவதியில் போட்டியிடுகிறார் நடிகை நவ்நீத் கவுர்

Home / Movies / அமராவதியில் போட்டியிடுகிறார் நடிகை நவ்நீத் கவுர்
  25-Mar-2019  
Movies Back to

மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியில் நடிகை நவ்நீத் கவுர் போட்டியிடுகிறார்.

தமிழில், விஜயகாந்த் ஜோடியாக அரசாங்கம், கருணாஸ் ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்தவர் நவ்நீத் கவு. இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு, அமராவதி மாவட்டம் பட்னேரா சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர் பின்னர் யுவா ஸ்வாபிமான் ( Yuva Swabhiman Party) என்ற கட்சியை தொடங்கினார். வருகிற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் இந்தக் கட்சி இணைந்துள்ளது. இதற்கு அமராவதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தனது மனைவி நவ்நீத் கவுரை நிறுத்தியுள்ளார் ரவி ராணா.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போட்டியிட்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த் ராவ் அட்சுல்லிடம் தோல்வியடைந்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.