cbecpy@gmail.com      +9198944 75754

''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்

Home / Movies / ''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்
  10-Apr-2019  
Movies Back to

இந்தியில் படம் நடிக்க அஜித் விருப்பம் தெரிவிப்பார் என்று நம்புவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்

நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும். 

படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் ஆகஸ்ட் 10ல் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் திரைப்படம் குறித்து நடிகர் அஜித் குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ''நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜித் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

விரைவில் இந்தியில் படம் நடிக்க அஜித் விருப்பம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். அப்படியானால் என்னிடம் 3 ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பார் என்று நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.