cbecpy@gmail.com      +9198944 75754

படப்பிடிப்பில் விபத்து: தெலுங்கு ஹீரோ நாக சவுரியா படுகாயம்!

Home / Movies / படப்பிடிப்பில் விபத்து: தெலுங்கு ஹீரோ நாக சவுரியா படுகாயம்!
  17-Jun-2019  
Movies Back to

படப்பிடிப்பில் நடந்த விபத்தில், நடிகர் நாக சவுரியாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. 

பிரபல தெலுங்கு ஹீரோ நாக சவுரியா. இவர் தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கிய, ’தியா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சாய் பல்லவி மீது இவர் கூறிய புகார்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. 

இவர் இப்போது, ’அஸ்வத்தம்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதை அறிமுக இயக்குனர் ரமண தேஜா இயக்குகிறார். மெஹ்ரின் ஹீரோயின். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் ஊட்டி என்று கூறப்படும் அரக்குவேலியில் நடந்து வந்தது. ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போது, டூப் போடாமல் தானே நடித்து வந்தார் நாக சவுரியா. அப்போது எதிர்பாராதவிதமாக, நடந்த விபத்தில் அவர் இடது கால் மூட்டில் பலத்த காயமடைந்தது.

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  டாக்டர்கள், அவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.