cbecpy@gmail.com      +9198944 75754

வெள்ள நிவாரணம்: காருக்கான ஃபேன்சி நம்பர் ஏலத்தில் இருந்து விலகிய பிருத்விராஜ்!

Home / Movies / வெள்ள நிவாரணம்: காருக்கான ஃபேன்சி நம்பர் ஏலத்தில் இருந்து விலகிய பிருத்விராஜ்!
  17-Aug-2019  
Movies Back to

தனது விலை உயர்ந்த காருக்கான ஃபேன்சி நம்பர் ஏலத்தில் இருந்து விலகியுள்ள நடிகர் பிருத்விராஜ், அந்த தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள ஹீரோ பிருத்விராஜ். தமிழில், ’மொழி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மோகன் லால் நடித்த, ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் ஹிட்டானது. இவருக்கு கார்கள் மீது அதிக ஆசை. புதிது புதிதாக கார்களை வாங்குவார். அதற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவதும் வழக்கம். இதற்காக அவர் பல லட்சங்களை செலவு செய்வார்.

இந்நிலையில், இவர் ரூ.3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) காரை வாங்கினார். இந்த காருக்கு KL 07 CS 7777 என்ற எண் கிடைக்க, கொச்சி ஆர்டிஓ ஆபிசில் பதிவு செய்திருந்தார். இந்த எண்ணிற்கு மேலும் பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஒரே எண்ணிற்கு பலர் விண்ணப்பித்தால் ஏலத்தில் விடப்பட்டு, அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு அந்த எண் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பிருத்விராஜ் ஏலத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கேரள வெள்ள நிவார ண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

’’பிருத்விராஜ் ஏலத்தில் பங்குபெற பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அந்த ஏலத்தில் இருந்து விலகுவதாகவும் அதற்காக வைத்திருந்த தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்’’ என்று ஆர்டிஓ மனோஜ்குமார் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.