மணிரத்னம் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூம் ஒரே கதையை திரைப்படமாக இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஏ.சுபாஸ்கரனுக்கு மலேசியாவில் உள்ள எய்ம்ஸ்டி பல்கலைக்கழகம் சமீபத்தில் கவரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மணிரத்னம், சுபாஸ்கரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மணிரத்னத்தின் பேச்சுக்குப் பிறகு பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், சுபாஸ்கரனின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைந்துள்ளன என்றார்.
மேலும், அதை வைத்து ஒரு நல்ல வாழ்க்கை வரலாற்றை உருவாக்க முடியும். மணி ரத்னம் முதல் பகுதியை இயக்க முடிவு செய்தால், அதன் தொடர்ச்சியை வைத்து இரண்டாம் பாகம் எடுக்க என்னை அழைப்பார் என்றும் கூறி இருந்தார். ஆக, தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய இயக்குநர்கள் இயக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணி ரத்னம் அவ்வளவு எளிதில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார். அவரே மனம் திறந்து கூறி இருப்பதால் இந்தக் கதையை இரண்டு இயக்குநர்கள் நிச்சயம் இயக்குவார்கள் என்கிறனர் திரைத்துறையினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM