cbecpy@gmail.com      +9198944 75754

வெளியானது தர்பார் ட்ரைலர் !

Home / Movies / வெளியானது தர்பார் ட்ரைலர் !
  16-Dec-2019  
Movies Back to

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக ‘தர்பார்’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Image

அனிருத்  இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ட்ரைலருக்காக அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.

Image

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தர்பார் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.50 மணிக்கு வெளியானது. இதனையடுத்து தர்பார் படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.