இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லிஸ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
70 வயதான பாப் வில்லிஸ், கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். 1980-களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக வலம் வந்த பாப் வில்லிஸ், சர்வதேச அரங்கில் 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 308 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பாப் வில்லியம்ஸ், 899 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்த வில்லிஸ், 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது இன்று வரை நினைவு கூறப்பட்டு வருகிறது. பாப் வில்லிஸ்ஸின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.