இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதேசமயம் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரம்டின்க்கு பதிலாக பூரான் சேர்க்கப்பட்டுள்ளார்.