இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்ததே பிரச்னை என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி நேற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “முதலில் பேட்டிங் செய்ததே பிரச்னை. ரன்கள் ஏராளமான எண்ணங்களை கூறும், ஆனால் அது போதுமானதாக இல்லாதபோது நல்ல எண்ணங்களாக இருக்காது. கடைசி 4 ஓவர்களில் 40-50 ரன்கள் அடிக்க வேண்டும். 30 இல்லை. சிவம் நன்றாக அடித்துக்கொடுத்தார். அவர் ஆடும்போது எதிர்பார்த்த ஸ்கோர், முடிவில் இல்லை.
முதல் நான்கு ஓவர்களில் நன்றாக பந்துவீசினோம். ஆனால் சில கேட்சுகளை விட்டுவிட்டோம். அதற்கான விலையை (தோல்வியை) கொடுத்துதான் ஆக வேண்டும். ஃபீல்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு நன்றாக எடுபடும் எனத் தெரியும். அதனால் ஸ்பின் பவுலிங்கை நன்றாக ஆடும் சிவம் டூபேவை இறக்கினோம். இந்த முயற்சியும் நன்றாக செயல்பட்டது. ஆனாலும் கேட்ச்களில் சொதப்பிவிட்டோம்” என்று கூறினார்.