இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற இரு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பேட்டிங், பவுலிங்கை விட ஃபீல்டிங்கே கவலையளிக்கும் விதமாக உள்ளது. மேலும், தொடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத ரோஹித் சர்மா அவரின் சொந்த மண்ணான மும்பையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் சாஹல்க்கு பதிலாக குல்தீப் யாதவும், ஜடேஜாவுக்கு பதிலாக முகமது ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.