cbecpy@gmail.com      +9198944 75754

‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ - விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?

Home / Movies / ‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ - விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?
  15-Dec-2019  
Movies Back to

இயக்குநர் அட்லீ மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக உறுதியளித்துள்ளார். 

விஜயை வைத்து இயக்குநர் அட்லீ கடைசியாக இயக்கிய திரைப்படம் 'பிகில்'. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது என சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். 'பிகில்' மிகப்பெரிய ரெக்கார்டை உருவாக்கியதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. குறிப்பாக படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று; விஜயின் ராயப்பன் கதாபாத்திரம். ராயப்பன் மையமாக வைத்து ஒரு முழு கேங்க்ஸ்டர் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அது குறித்து இயக்குனர் அட்லீயும் மனம் திறந்து பதிலளித்துள்ளார். 

சமூக வலைதளமான ட்விட்டரில் ‘பிகில்’ஹர்சன் என்பவர் இயக்குநர் அட்லீயிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், ‘மதுரை சம்பவத்தை பார்த்து ராயப்பனுக்கு ஒரு கதை எடு தலைவா’ எனக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்க முன்வந்த அட்லீ, ‘செஞ்சுட்டா போச்சு...’ என்று உறுதி அளித்துள்ளார். இன்னொருவர் ‘வேற லெவல்ல தளபதியை ஸ்கிரின்ல பார்க்கணும்.. வெறித்தனமான கெட் அப்ல.. முழுமையான பவர் பேக்டு மாஸ்.. அதிரடி கேங்ஸ்டர் படத்தை செய்யுங்க பாஸ்’ என்று கூறி இருந்தார். அதற்கும் அட்லீ, ‘செஞ்சுட்டா போச்சு’ என்று உறுதி அளித்துள்ளார்.

அட்லீயின் இந்தப் பதிலைப் படித்ததும், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்தடுத்து தங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அட்லீ தனது திரை வாழ்க்கையை ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து எடுத்த ‘ராஜா ராணி’ படத்திலிருந்து தொடங்கினார். 2013 இல் இந்தப் படம் திரைக்கு வந்தது. அதன் பின்னர் விஜயுடன்  ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என வரிசையாக மூன்று படங்களை இயக்கி இருந்தார். இவை அனைத்தும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.